Skip to main content

என்.எல்.சிக்கு எதிராக போராட தயாராகும் ஒப்பந்த தொழிலாளர்கள்! 

Published on 24/08/2018 | Edited on 24/08/2018
ன்


பணி நிரந்தரம், சம வேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி என்.எல்.சியில் பணியாற்றும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர். இவர்களில் 50% பேர் என்.எல்.சிக்காக வீடு, நிலம் கொடுத்தவர்கள்.

ஆனால் நீதிமன்ற வழக்குகளை காரணம் காட்டி ஒப்பபந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யாமல் காலம் தாழ்த்தி வருகிறது.  உச்சநீதிமன்றம் பணி மூப்பு பட்டியலை தயார் செய்து படிப்படியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தியது. அதையடுத்து இன்ட்கோசெர்வ் சொசைட்டியில் உள்ள சுமார் 800 பேரின் பட்டியலை நிர்வாகம் வெளியிட்டது. அதிலும் ஏகப்பட்ட குளறுபடிகள் உள்ளதாக தொழிலாளர்கள் குற்றம் சாற்றுகின்றனர். 

 

n

 

இந்நிலையில் உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி கடந்த 20-ஆம் தேதி ஒப்பந்த தொழிலாளர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வெலை நிறுத்த அறிவிப்பு பேரணி நடத்தி வேலை நிறுத்த அறிவிக்கையை நிர்வாகத்திடம் அளித்தனர்.   அதனைத்தொடர்ந்து வேலை வாய்ப்புகளில் என்.எல்.சிக்காக  வீடு, நிலம் கொடுத்தவர்களுக்கு  முன்னுரிமை வழங்க கோரி பேரணி நேற்று மாலை பேரணி நடைபெற்றது. 


என்.எல்.சி யில்  பல ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரியும் ஒப்பந்தத் தொழிலாளர்களையும் சொசைட்டியில் சேர்க்க வேண்டும், வீடு,  நிலம் கொடுத்து பாதிக்கபட்டவர்களுக்கு பணி நிரந்தரத்தில்    முன்னுரிமை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் பேரணியில் வலியுறுத்தப்பட்டது.

 

ஸ்டோர் ரோடிலிருந்து என்.எல்.சி  தலைமை அலுவலகத்தை நோக்கி பேரணியாக சென்றவர்களை காவல்துறையினர் வழியிலேயே தடுத்து நிறுத்தினர். பின்னர் வீடு நிலம் கொடுத்து பாதிக்கப்பட்டோர் சங்க நிர்வாகிகள் ஐந்து பேர் என்.எல்.சி துணை மேலாளர் உமாமகேஸ்வரனை  சந்தித்து மனு அளித்தனர். பேரணியில் என்.எல்.சி க்கு வீடு, நிலம் கொடுத்து பாதிக்கப்பட்ட, ஒப்பந்த தொழிலாளர்கள் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

 

தொழிற்சங்கங்கள் அடுத்தடுத்து வேலை நிறுத்தத்திற்கு தயாராகி வருவதால் என்.எல்.சி அதிகாரிகள் தொழிலாளர்கள் பிரச்சினைகளை பேசி தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது.

 

சார்ந்த செய்திகள்