கீரமங்கலத்தில் ஒரே நாள் இரவில் 5 கடைகளில் பூட்டுகளை உடைத்து முகமூடி கொள்ளைகள் அட்டூழியம். குண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து போலிசார் விசாரனை செய்து வருகின்றனர்.
5 கடைகளில் திருட்டு :
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் பேருந்து நிலையம் பகுதியில் மேற்பனைக்காடு சாலை அருகே உள்ள பேக்கரி, மளிகைகளை, பூச்சிமருந்துகடை, ஜவுளிக்கடை, ஆட்டோ மெக்காளிக் கடைகளின் அதிகாலை 3 மணிக்கு பிறகு வந்த கொள்ளைகள் பூட்டுகளை உடைத்து கல்லாவில் இருந்த பணத்தை திருடிச் சென்றுள்ளனர். காலை கடைகளை திறக்க வந்த போது கடைகளின் பூட்டு உடைக்கப்பட்டு திருட்டு நடந்திருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். உடனே கீரமங்கலம் போலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
முகமுடி கொள்ளையர்கள் :
கீரமங்கலம் போலிசார் திருட்டு நடந்த கடைகளுக்கு வந்து ஆய்வு செய்தனர். அப்போது சில கடைகளில் உள்ள கண்காணிப்பு கேமராவில் அந்த கொள்ளையர்களின் உருவம் பதிவாகி இருப்பது தெரிய வந்தது. அதில் அதிகாலை 3 மணியில் இருந்து 4 மணிக்குள் அனைத்து கடைகளிலும் முகமூடி அணிந்த நபர்கள் பூட்டை உடைத்து திருடும் முன்பு கண்காணிப்பு கேமராக்களை வேறு பக்கமாக திருப்பி வைத்துவிட்டு கடைகளுக்குள் சென்றுள்ளனர். கடைகளுக்குள் சென்று வேறு எங்கும் தேடாமல் நேராக கல்லா இருக்கும் பகுதிக்கு சென்று கல்லைவை திறந்து அதில் இருந்த பணத்தை எடுத்துக் கொண்டு செல்லும் போது கதவுகளை சாத்திவிட்டு செல்கின்றனர். ஆனால் பூச்சி மருந்து கடையில் மட்டுமே பணம் அதிகமாக இருந்துள்ளது மற்ற கடைகளில் பணம் குறைவாக இருற்துள்ளது.
சில்லரை எடுக்கவில்லை :
ஒரு ஜவுளிக்கடையின் உள்ளே நுழைந்த முகமூடி திருடன் கல்லாவில் பணம் எடுத்துக் கொண்டு வெளியே செல்ல நடந்து சென்றவன் மீண்டும் கடைக்குள் சென்று கைலி ஒன்று எடுத்துக் கொண்டு மாற்றுத் திறனாளி போல நடித்துக் கொண்டு நடந்து சென்று கதவை சாத்தி விட்டு செல்கிறான்.
மேலும் பேக்கரி, மளிகை கடைகளில் தாள்களாக இருந்த பணத்தை மட்டும் எடுத்தவர்கள் சில்லரை காசுகளை எடுக்கவில்லை. மேலும் வேறு எந்த பொருளையும் உடைக்கவில்லை. இந்த பதிவுகளை பார்த்த கீரமங்கலம் போலிசார் விசாரனை செய்து வருகின்றனர். கீரமங்கலத்தில் ஒரே நேரத்தில் 5 கடைகளின் பூட்டை உடைத்து திருட்டு சம்பவம் நடந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.