சிதம்பரம் நகரத்தில் தீபாவளி நேரத்தில் பொதுமக்களின் கூட்டம் மேலவீதி உள்ளிட்ட முக்கிய இடங்களில் அதிகமாக உள்ளது. இந்த போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தி போக்குவரத்தை வெயில், மட்டும் மழை நேரங்களில் சீரான முறையில் இயக்கி வரும் சிதம்பரம் நகர போக்குவரத்து காவல்துறையினருக்கு பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சார்பாக வாழ்த்து தெரிவிக்கும் நிகழ்ச்சி சிதம்பரம் கஞ்சித் தொட்டி முனையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சமூக ஆர்வலர் நிகில்குப்தா, நடராஜ், சங்கர், எம்.எஸ் சங்கர் உள்ளிட்ட பொதுமக்கள் கலந்துகொண்டு சிதம்பரம் நகர போக்குவரத்து காவல் ஆய்வாளர் கலையரசன், உதவியாளர் ஆனந்த், சிறப்பு உதவி ஆய்வாளர் உத்தராபதி, போக்குவரத்து காவலர்கள் சண்முகம், மதன்குமார், பிரபு, சுமன், தேவநாதன் உள்ளிட்டவர்களுக்கு பழச்சாறு மற்றும் இனிப்புகள் வழங்கி அவர்களின் சேவையைக் கௌரவித்தனர்.
அப்போது போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் கலையரசன் பொதுமக்கள் தீபாவளி நேரம் என்பதால் கடைத்தெரு பகுதிகளில் அதிகமாக பொதுமக்களின் கூட்டம் இருக்கும். எனவே தங்கள் கொண்டு வரும் இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை பொதுமக்களுக்கு எந்த தொந்தரவும் ஏற்படாத வகையில் போக்குவரத்து நெரிசல் உள்ள முக்கிய தெருக்களில் நிறுத்தாமல் இதற்கு மாற்றக உள்ள தெருக்களில் நிறுத்தி போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். மேலும் பொதுமக்கள் போக்குவரத்து விதிகளை கடைப்பிடித்து நடக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.