Skip to main content

குடிநீருக்காக தெரு தெருவாய் அலையும் கிராம மக்கள்..!

Published on 22/07/2018 | Edited on 27/08/2018
Water


நீர் இன்றி அமையாது உலகு, என்பார்கள் அந்த நீருக்காக அனைத்து ஜீவராசிகளும் தினம் தோறும் அலையாய் அலைவுதும் அண்டை மாநிலங்களோடு அல்லல்படுவதும் வாடிக்கையாகி விட்டது. அதற்கு எடுத்துகாட்டாக கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி ஒன்றியத்திற்கு உட்பட்ட கீழூர் ஊராட்சி ஆயிப்பேட்டை கிராமத்தில் கடந்த ஆறு மாத காலமாக குடிநீர் இல்லாமல் அல்லல்பட்டுவந்த நிலையில் குறிஞ்சிப்பாடி ஊராட்சி பொது நிதியில் இருந்து புதிதாக ஒரு போர்வெல் போடப்பட்டு குடி தண்ணீரும் வந்தது.

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்பார்கள். அதுபோல மோட்டார் பொருத்தபட்டும் தண்ணீர் சேரும் சகதியுமாக வருகிறது. கடந்த இரு வாரங்களாக அந்த போர்வெல் தண்ணீர் குடிக்க லாயக்கற்றதாகி இருப்பதுதான் வேதனை. சரியாக கம்பர்சர் வைத்து ஊதாமல் மேம் போக்காக ஊதியதால் தண்ணீர் இன்னும் தெளியவில்லை.
 

 

 

இதற்கு எந்த வித நடவடிக்கைகளும் ஒன்றிய நிர்வாகம் மேற்கொள்ளாததால் குடிநீருக்காக ஆயிப்பேட்டை கிராமத்தில் உள்ள இருநூற்று ஐம்பதுக்கும் மேற்பட்ட குடும்பம் குடிநீருக்காக அவதிகளை சந்தித்து வருகிறது. ஆயிப்பேட்டை கிராம மக்களின் குடிநீர் தேவைகளை குறிஞ்சிப்பாடி ஒன்றிய நிர்வாகமும் ஊராட்சி நிர்வாகமும் இணைந்து நல்ல ஒரு முடிவை எடுத்து மக்களுக்கு குடிநீர் வழங்க வழிவகை செய்ய வேண்டும என மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

 

சார்ந்த செய்திகள்