
1722 ஆம் ஆண்டுகளில் நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் வட்டத்தில் நெற்கட்டும் செவல் பாளையத்தை ஆண்டு வந்த மன்னன் பூலித்தேவன் வெள்ளையர்களின் ஏகாதிபதியத்தை எதிர்த்து ஒரு குன்று மணி அளவு மண் கூட வரியாக தரமாட்டேன் என்று அவர்களை எதிர்த்த முதல் சுதந்திர போராட்ட மன்னன் பூலித்தேவன். அவரது பிறந்தநாள் விழா 303 - வது பிறந்த நாள் விழாவாக இன்று நெற்கட்டும் செவல் கிராமத்தில் கொண்டாடப்பட்டது.
அரசு சார்பில் துணை முதல்வர் ஓ.பி.எஸ் மற்றும் அமைச்சர்கள் ராஜலெட்சுமி, கடம்பூர் ராஜூ, ஓ.எஸ்.மணியன், திண்டுக்கல் சீனிவாசன், மணிகண்டன் உள்ளிட்ட 7 அமைச்சர்கள் அங்குள்ள மணிமண்டபத்தில் அமைக்கப்பட்டிருந்த பூலித்தேவன் சிலைக்கு மாலை மரியாதை செலுத்தினர். அவர்களை வரவேற்பதற்காக அதிமுக தொண்டர்கள் வருகை தந்தினர். மாலை அணிவித்த பின் செய்தியளார்களை சந்தித்த ஓ.பி.எஸ்,

பூலித்தேவன் பாளையம் நெற்கட்டும் செவல் பகுதி சுற்றுலா தளமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு முதற்கட்டமாக ரூ.50 லட்சம் நிதி ஓதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தாமிரபரணி, புஸ்கரணி விழா அரசு விழாவாக நடத்தப்படும் என்றார். பின்னர் பள்ளி மாணவிகள் சுமார் 20 பேருக்கு நோட்புக் மற்றும் பென்சில்கள் கொடுத்தார்.

இந்த விழாவில் நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் கலந்து கொண்டார். தொடர்ந்து மாலை 4 மணி அளவில் அமமுகவின் செயலாளர் டிடிவி தினகரன், பூலித்தேவருக்கு மரியாதை செலுத்துவதற்காக அங்கு வந்தார். அவருக்கு கிராமத்து சார்பில் திரண்டிருந்த அவரது கட்சியசின் 5000த்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பூலித்தேவருக்கு மரியாதை செலுத்திய பின் நினைவு சின்னமாக டிடிவி தினகரனுக்கு தொண்டர்கள் வீரவாள் பரிசளித்தனர்.
பின்னர் பேசிய டிடிவி தினகரன், பூலித்தேவன் ஆட்சியை போன்று மக்களாட்சி விரைவில் மலரும். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் வழியில் ஆட்சி நடக்கும் என்றார்.