தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக ஏராளமானோர் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் குவிந்து வருகின்றனர். ஊருக்கு செல்லும் ஆர்வத்தில் இடம் பிடிப்பதற்காக பலரும் முண்டியடித்துக் கொண்டு ரயிலில் ஏறுகின்றனர். இன்னும் சிலர் அவசர வழி ஜன்னல் வழியாகவும் உள்ளே ஏறுகின்றனர். இதே போன்று சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்குச் செல்வதற்கு கோயம்பேடு பேருந்து நிலையத்திலும் ஏராளமானோர் குவிந்து வருகின்றனர்.
இதனிடையே தீபாவளி பண்டிகையையொட்டி பட்டாசு வியாபாரம் சென்னையில் சூடுபிடித்துள்ளது. தீவுத்திடலில் நடந்து வரும் பட்டாசு விற்பனை கடைகளில் மக்கள் ஆர்வமுடன் வந்து பட்டாசுகளை வாங்கிச் செல்கின்றனர். ஆனால் கடந்த ஆண்டை விட இந்த ஜி.எஸ்.டி வரியால் இரண்டு மடங்கு விலை அதிகமாகி விட்டதால் வியாபாரிகளும் மக்களும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறுகின்றனர். குடும்பத்துடன் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை மற்றும் சில்லரை வியாபாரிகளும் வந்து வாங்கிச் செல்கின்றனர்.