கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகிலுள்ள முருகன்குடி, தாழநல்லூர் மற்றும் விருத்தாசலம் அருகேயுள்ள கோட்டேரி ஆகிய கிராமங்களில் சில விவசாயிகள் நெல், நிலக்கடலை, உளுந்து போன்ற பயிர்களை இயற்கையான முறையில் ரசாயன உரங்கள் பயன்படுத்தாமல் சாகுபடி செய்து வருகின்றனர்.
இந்த கிராம பகுதிகளில் இயற்கை விவசாயம் செய்யும் விவசாயிகளின் நிலங்களை ஜெர்மன் நாட்டில் விவசாயத்துறையில் டாக்டர் பட்டம் பெற்ற ஜுடித் போப் (Judith Bopp) என்ற பெண்மணி பார்வையிட்டு, இயற்கை வேளாண் சாகுபடி முறைகளை கேட்டறிந்தார்.

மேலும் முருகன்குடியில் புதிதாக தொடங்கப்பட்ட பனை மரபு அங்காடியினையும் பார்வையிட்டார். அவர்களுக்கு இயற்கை வேளாண் அறிஞர் கோ. நம்மாழ்வார் அவர்களின் படம் அன்பளிப்பாக செந்தமிழ் மரபுவழி வேளாண் நடுவத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் கண்ணதாசன் வழங்கினார். இவர்களுடன் இயற்கை விவசாயிகள் க.முருகன், அரா. கனகசபை, இராமச்சந்திரன், கவியரசன், பரத், மு.திவ்யா, ம.கனிமொழி, தமிழ்மொழி ஆகியோர் ஆகியோர் பங்கேற்றனர்.
