கோவை அடுத்த மேட்டுப்பாளையத்தில் பெய்த தொடர் கனமழையின் காரணமாக வீட்டின் சுற்றுச்சுவர் இடிந்து வீட்டின் மேல் விழுந்தது. இந்த விபத்தில் வீட்டிற்குள் உறங்கிக் கொண்டிருந்த 17 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்நிலையில் சம்பவஇடத்திற்கு ,முதல்வர் எடப்பாடி, துணை முதல்வர் ஓபிஎஸ் மற்றும் அமைச்சர்கள் நேரில் ஆய்வு மேற்கொண்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் எடப்பாடி, சுவர் இடிந்து விழுந்து 17 உயிரிழந்த சம்பவம் பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட 17 பேர் குடுப்பதிற்கும் ஏற்கனவே 4 லட்சம் நிவாரண நிதி அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் முதல்வரின் நிவாரண நிதியிலிருந்து 6 லட்சம் என மொத்தம் 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும். அதேபோல் வீடுகளை இழந்தவர்களுக்கு வீடுகள் கட்டித்தரப்படும். வேலை வாய்ப்புக்கும் வழிவகை செய்யும் வகையில் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனக்கூறினார்.
மேலும் இடிந்தது தீண்டாமை சுவரா? என்ற கேள்விக்கு, இந்த பிரச்சனையை சட்டரீதியாகவே அணுக முடியும். சட்டப்படி நடவடிக்கை எடுப்போம் என்றார்.