Published on 18/11/2021 | Edited on 18/11/2021
திருச்சியில் சாலைகளில் கால்நடைகள் சுற்றித்திரிந்தால் 10,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என திருச்சி மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
திருச்சியில் தெருக்கள் மற்றும் சாலைகளில் கால்நடைகள் சுற்றித் திரிவதால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதோடு சுகாதார சீர்கேடும் ஏற்படுவதாக புகார்கள் எழுந்த நிலையில், சாலைகளில் கால்நடைகள் சுற்றித்திரிந்தால் 10,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என திருச்சி மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டுள்ளார். அபராதம் விதிக்கப்படும் கால்நடையின் உரிமையாளர்கள் அபராதத்தொகை 10 ஆயிரத்தை மூன்று நாட்களில் செலுத்தி கால்நடைகளைத் திரும்பப் பெறவில்லை என்றால் பிடிக்கப்பட்ட கால்நடைகள் சந்தையில் விற்கப்படும் எனவும் மாநகராட்சி ஆணையர் எச்சரித்துள்ளார்.