கலைஞரின் 5 ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி தொடங்கி நடைபெற்று வருகிறது.
முன்னாள் முதல்வரும், 50 ஆண்டுகள் திமுகவின் தலைவராகவும் இருந்தவருமான கலைஞரின் 5 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. கலைஞரின் நினைவு நாளைப் போற்றும் வகையில் தமிழகம் முழுவதும் பேனர்கள் வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் முதல்வர் ஸ்டாலின், ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள கலைஞரின் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவர்களுடன் திமுக அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் சென்று கலைஞரின் சிலைக்கு மரியாதை செலுத்தினார்கள்.
இதனைத் தொடர்ந்து கலைஞரின் 5 ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி நடைபெற்று வருகிறது. சென்னை ஓமந்தூரார் வளாகத்தில் உள்ள கலைஞர் சிலையிலிருந்து கலைஞர் நினைவிடம் வரை இந்த அமைதிப் பேரணி செல்லவுள்ளது. இந்தப் பேரணியில் ஏராளமான திமுகவினர் கருப்புச் சட்டை அணிந்து பங்கேற்றுள்ளனர்.