திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் உள்ள வீட்டின் தோட்டத்தில் விளையாடிக்கொண்டிருந்த 2 வயது குழந்தை சுர்ஜித் ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்தான்.
ஆழ்துளை கிணற்றில் 25.10.2019 மாலை 5.40 மணிக்கு விழுந்த குழந்தை சுர்ஜித் 88 அடிக்கு சென்றுவிட்ட நிலையில் தொடர்ந்து 70 மணி நேரமாக மீட்புப்பணி தொடர்கிறது. இந்நிலையில் பிரதமர் மோடிக்கு சுர்ஜித் மீட்பு நடவடிக்கைகள் குறித்து விளக்கியுள்ளதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து தெரிவித்துள்ள அவர், "நடுகாட்டுப்பட்டி கிராமத்தில் பயன்படுத்தப்படாத போர்வெல்லில் விழுந்த குழந்தை சுஜித் வில்சனை காப்பாற்றுவதற்கான மீட்பு முயற்சிகள் குறித்து பிரதமருக்கு விளக்கினேன். தீயணைப்பு மற்றும் மீட்பு படைகள், என்.டி.ஆர்.எஃப் மற்றும் எஸ்.டி.ஆர்.எஃப் உடன் மூன்று அமைச்சர்களும் பனி நடக்கும் இடத்தில உள்ளனர்" என தெரிவித்துள்ளார்.