புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பகுதியைச் சேர்ந்தவர் அருள்நாதன். (51). புதுக்கோட்டையில் ஒரு தனியார் உணவு விடுதியில் வேலை செய்கிறார். நேற்று வழக்கம் போல தனது மோட்டார் சைக்கிளில் வேலைக்கு சென்றவர். புதுக்கோட்டை கோவலர் விடுதி அருகே பின்னால் வந்த வாகனம் மோதிய விபத்தில் தலையில் பலத்த காயமடைந்தார். அக்கம் பக்கதி்னர் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
இன்று காலை அவரை வேறு வார்டுக்கு மாற்றப்பட்டார். தலையில் பலத்த காயம் உள்ளதால் மேலும் ஸ்கேன் எடுக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ள நிலையில் மாற்றப்பட்ட வார்டுக்கு அருள்நாதனை சக்கர நாற்காலியில் வைத்து தள்ளி வந்துள்ளனர். ஆனால் அந்த வார்டில் படுக்கை இல்லை. டாக்டர்கள் வந்து யாரையாவது டிசார்ஜ் செய்தால் அதன் பிறகு படுக்கலாம் என்று இன்று காலை 7 மணி முதல் 11 மணி வரை சக்கர நாற்காலியிலேயே இருக்க வைத்துவிட்டனர்.
தலையில் பலத்த காயத்துடன் சக்கர நாற்காலியில் இருக்க முடியாமல் அடிக்கடி மயக்கடைந்து சரிந்தவரை அருகில் நின்ற உறவினர்கள் தாங்கி பிடித்துக் கொண்டனர். 11 மணிக்கு பிறகு அதாவது 4 மணி நேரத்திற்கு பிறகு 4 பிளாக்கில் 411 படுக்கையில் படுக்க வைத்துள்ளனர்.
சுகாதாரத்துறை அமைச்சரின் மாவட்டத்தில் அவரது முயற்சியால் கொண்டு வரப்பட்ட மருத்துவக்கல்லூரியில் இப்படி நோயாளிகளை படுக்கை இல்லை, இடமில்லை என்று சொல்லி வதைப்பது நல்லதா? அமைச்சர் விஜயபாஸ்கர் தான் கவணிக்க வேண்டும்.
செம்பருத்தி.