ஈரோடு மாநகராட்சி 4 ம் மண்டல அலுவலகத்தில் அ.தி.மு.க. முன்னாள் கவுன்சிலரும் கட்சியின் பகுதி செயலாளருமான கோவிந்தராஜ் , மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் பணியாளர்களிடம் அத்துமீறி பேசுவதும் நான் சொல்வதை மட்டும் செய்யுங்கள் என அடாவடியாக நடந்து கொள்வதும் வாடிக்கையாக இருந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று மாநகராட்சி துணை ஆணையாளர் அசோக்குமாரிடம் கமிஷன் பிரச்சனைக்காக வாக்குவாதம் செய்த கோவிந்தராஜ் துணை ஆணையாளர் அசோக்குமாரை அடிக்க முனைந்துள்ளார். இதனால் மாநகராட்சி பனியாளர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையே இன்று மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளரிடம் அ.தி.மு.க. பகுதி செயலாளர் கோவிந்தராஜ் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு கொடுத்ததோடு மாநகராட்சி அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பகுதி செயலாளர் கோவிந்தராஜ் அ.தி.மு.க.மாநகர் மா.செ.வும் ஈரோடு மேற்கு தொகுதி எம்.எல்.ஏ.வுமான கே.வி.ராமலிங்கத்திற்கு நெருக்கமாக உள்ளார்.
மாநகராட்சி துணை ஆணையர் அசோக்குமாருக்கும் இவருக்கும் ஏற்பட்ட பங்கு பிரச்சனை தான் போராட்டம் வரை வந்துள்ளது என்கிறார்கள் மாநகராட்சி ஊழியர்கள்.