கன்னியாகுமரி மாவட்டத்தில் கல்லூரி மாணவா்கள் பலா் போதை ஊசிக்கு அடிமையாகி போதையில் வகுப்பறைகளில் இருப்பதும் கல்லூரி வளாகத்தில் போதையில் தகராறு செய்வதும், நாளுக்கு நாள் அதிகாித்து வருகின்றது. மேலும் பல மாணவா்கள் வீட்டிலும் போதையில் படுத்து உறங்குவதுமாகவும் உள்ளன.
மாணவா்களின் இச்செயல் பெற்றோா்கள் மற்றும் ஆசிாியா்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் போலீசாரும் கல்லூாிகள் அருகில் நின்று மாணவா்களையும் கண்காணித்து வருகின்றனா். இருந்த போதிலும் மாணவா்கள் போதை ஊசிக்கு அடிமையாவதை போலீசாரால் கட்டுபடுத்தவும் முடியவில்லை. அதே போல் போலீசாரால் போதை ஊசி சப்ளை செய்யும் கும்பலை தடுக்க முடியவில்லை.
இந்த நிலையில் இன்று நாகா்கோவில் நேசமணி நகா் அருகில் சந்தேகத்துக் கிடமாக நின்று கொண்டியிருந்த அறுகுவிளையை சோ்ந்த சேகா் (43), வெட்டூா்ணிமடத்தை சோ்ந்த ஆரோன்ராஜ்(30) இருவரையும் போலீசார் சோதனை செய்த போது அவா்களிடம் 15 போதை ஊசிகளும் மற்றும் போதை மருந்துகளும் இருந்தது தொிய வந்தது.
மேலும் போலீசார் அவா்களிடம் விசாாித்த போது, அவா்கள் இந்த போதை ஊசி மற்றும் போதை மருந்தை மதியம் கல்லூாி மாணவா்களுக்கு சப்ளை செய்ய இருந்ததை போலீசாரிடம் ஒப்புக்கொண்டனா். இதை தொடா்ந்து இருவரையும் போலீசார் கைது செய்ததோடு, அந்த மாணவா்கள் பற்றிய தகவலையும் கேட்டறிந்து அவா்கள் மீதும் நடவடிக்கை எடுக்க உள்ளனா்.