Skip to main content

  பரங்கிமலை ரயில் விபத்து - பாதிக்கப்பட்டவர்கள் அணுகாமல் தீர்ப்பாயமே முன்வந்து விசாரித்து இழப்பீடு தர உத்தரவு

Published on 28/07/2018 | Edited on 28/07/2018
parankimalai

 

பரங்கிமலை ரயில் விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா 8 லட்சம் இழப்பீடு தர வேண்டும் என்று ரயில்வே துறைக்கு சென்னை ரயில்வே இழப்பீடு தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.  காயமடைந்தவர்களுக்கு தலா 2 லட்சம் வழங்கவும் தாமாக முன் வந்து விசாரித்த தீர்ப்பாயம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.    மேலும் விபத்து தொடர்பாக சேத்துப்பட்டில் உள்ள ரயில்வே  தீர்ப்பாயத்தை அணுகலாம் என்று கூடுதல் பதிவாளர் அருந்ததி கூறியுள்ளார்.  


கடந்த செவ்வாய்க்கிழமை காலையில் சென்னை கடற்கரையில் இருந்து திருமால்பூர் சென்ற ரயிலில் கூட்ட நெருக்கடி அதிகம் என்பதால் படிக்கட்டில் தொங்கியபடி ஏராளமானோர் சென்றனர்.  இப்படி பயணம் செய்தவர்கள் பரங்கிமலை ரயில்நிலையத்தை கடந்தபோது பக்கவாட்டு தடுப்புச்சுவற்றில் மோதினர்.  இந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.   இதுகுறித்து தாமாக முன்வந்து விசாரித்த ரயில்வே இழப்பீட்டு தீர்ப்பாயம், உயிரிழந்தவர்களுக்கு தலா 8 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு 2 லட்சம் ரூபாயும் இழப்பீடாக வழங்க ரயில்வே துறைக்கு உத்தரவு பிறப்பித்திருக்கிறது.  பாதிக்கப்பட்டவர்கள் அணுகாமல் தீர்ப்பாயமே முன்வந்து விசாரித்து இழப்பீடு தர உத்தரவிட்டது முதல் முறையாகும்.

சார்ந்த செய்திகள்