பனங்குளம் பிடாரியம்மன் கோயில் மது எடுப்புத் திருவிழா
கீரமங்கலம், ஆக, 16 பனங்குளம் கிராமத்தில் பிடாரியம்மன் கோயில் மது எடுப்புத் திருவிழா நடைபெற்றது. மழை வேண்டி ஏராளமான பெண்கள் மது குடங்களுடன் ஊர்வலமாக சென்றனர்.

மழை வேண்டி :
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள பல்வேறு கிராமங்களில் மழை வேண்டி அம்மன் கோயில்களுக்கு முளைப்பாரி, மது எடுப்பு திருவிழாக்கள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் விவசாயம் செழிக்க நல்ல மழை பெய்ய வேண்டும் என்று கீரமங்கலம் அருகில் உள்ள பனங்குளம் கிராமத்தில் உள்ள பிடாரி அம்மன் கோயிலுக்கு மது எடுப்புத் திருவிழா ஆண்டு தோறும் நடத்தப்பட்டு வருகிறது.
மது எடுப்பு திருவிழா :
பனங்குளம் கிராமத்தில் வில்லுனி ஆற்றங்கரையில் எழுந்தருளியுள்ள பிடாரி அம்மன் கோயில் மது எடுப்புத் திருவிழாவை முன்னிட்டு பனங்குளம் கிராமத்தில் உள்ள பெண்கள் நெல், தென்னம் பாலைகளை குடங்களில் வைத்து மலர்களால் அலங்காரம் செய்து ஊர்வலமாக தூக்கி வந்து பெருமாள் கோயில் அருகில் கிராமத்தின் அனைத்து மதுக் குடங்களும் ஒன்று சேர்ந்து வானவேடிக்கைகளுடன் ஆட்டம் பாட்டத்துடன் ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். முடிவில் பிடாரியம்மன் கோயில் வளாகத்தில் அனைத்து பாலைகளையும் கொண்டு வந்து சேர்த்தனர்.
-இரா.பகத்சிங்