Skip to main content

கோர்ட்டுக்கு போகிறார் பழனி முருகன்! ஐம்பொன் சிலையை காக்கிகளிடம் ஒப்படைத்த அதிகாரிகள்!!

Published on 11/07/2018 | Edited on 11/07/2018

பழனி  முருகனின் ஐம்பொன் சிலை மோசடி வழக்கில் ஏற்கனவே ஸ்தபதி முத்தையா மற்றும் ராஜாவை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காக்கிகள் கைதுசெய்தும் தற்பொழுது ஜாமீனில் வெளியே வந்தும் இருக்கிறார்கள்

அதைத்தொடர்ந்து பழனிக்கு விசிட் அடித்த ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் கோவில் பணியாளர்கள்  மற்றும் முன்னாள்  பணியாளர்களிடம் அதிரடி விசாரணை நடத்தினார். அதை தொடர்ந்து பழனி கோவிலில் பணிபுரிந்த உதவி ஆணையர் புகழேந்தி மற்றும் சென்னை இந்துசமய அறநிலையத்துறை தலைமை அலுவலகத்தில் தங்கநகை சரிபார்ப்பு அதிகாரியாக பணியாற்றி வந்த தேவேந்திரன் ஆகியோரை ஐ.ஜி பொன்மாணிக்கவேல் தலைமையிலான காக்கிகள் கைது  செய்து அதிரடி  விசாரணை நடத்தினார்கள்.

ig

 

 

 

அதை தொடர்ந்து டி.எஸ்.பி.கருணாகரன் தலைமையிலான சில காக்கிகள் கடந்த ஒரு மாதமாக பழனியிலையே முகாமிட்டு கோவில் பணியாளர்கள் மற்றும் கோவிலில் பணிபுரிந்த முன்னாள்  அதிகாரிகளிடமும்  விசாரணை நடத்தினார்கள். அதில் முன்னாள்  இணை ஆணையர் தனபாலும்  அந்த  ஐம்பொன் சிலைமோசடியில் தொடர்பு  இருப்பதாக தெரிந்ததின் பேரில் தனபாலை கைது  செய்யும் முயற்சியில் டி.எஸ்.பி இறங்கி வந்தார்.

 

 

இந்த நிலையில்தான் எடப்பாடி அரசு திடீரென டி.எஸ்.பி.கருணாகரனை கோவை மின் திருட்டு தடுப்பு பிரிவுக்கு அதிரடியாக  மாற்றிவிட்டனர். ஆனால் ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் போலவே டி.எஸ்.பி  கருணாகரனும் நேர்மையானவர் எனவேதான் முன்னாள் ஆணையர் தனபால் மேல் நடவடிக்கை எடுக்கப்பார்த்தார். ஆனால் தனபாலோ எடப்பாடி வரை நெருக்கம் இருப்பதால் டி.எஸ்.பி.கருணாகரனை  டிரான்ஸ்சர் செய்யவும் வழி செய்து விட்டார் என்ற பேச்சு காக்கிகள் மத்தியில் பேசப்பட்டும் வந்தது. அப்படி இருந்தும் கூட பொன்மாணிக்கவேல் தலைமையிலான காக்கிகள்  தொடர்ந்து  தனபாலை தேடி வந்தனர். இந்த விஷயம் தனபாலுக்கு தெரியவே மதுரை  ஐகோட்டு கிளையில் சரணடைந்தார். அதன் பின் கும்பகோணம் கோர்ட்டில்  ஜாமீன்  பெற்றார்.

 

​​​​ig

 

 

 

இந்த நிலையில்தான் பழனிமலையில் உள்ள சாமி பெட்டகத்தில் வைக்கப்பட்டு இருந்த ஐம்பொன் முருகன் சிலையை கும்பகோணம் கோர்ட்டில் ஆஜர் படுத்துவதற்காக  ஐ.ஜி பொன் மாணிக்கவேல் தலைமையில் செயல்படும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவை சேர்ந்த  ஏ.டி.எஸ்.பி. ராஜாராம். டி.எஸ்.பி வெங்கட்ராமன் உள்பட சில காக்கிகள் பழனிக்கு விசிட் அடித்தனர்.  அந்த  ஐம்பொன் சிலையை கோர்ட்டுக்கு  கொண்டு போக கோவில் அதிகாரிகளிடம் கேட்டனர்.  அதன் அடிப்படையில்தான்  கோவில் அதிகாரிகளும் அந்த  ஐம்பொன் சிலையில் இருந்த சக்தியை கும்பத்தில் ஆவாகனம் செய்த பின் மூலஸ்தானத்தில் உள்ள நவப்பாசன முருகன் சிலைக்கு  அபிஷேகம் செய்தனர். அதன் மூலம் ஐம்பொன் சிலை சக்தி இழந்த  சிலையாக மாற்றப்பட்டடு கோவில் இணை  ஆணையர்  செல்வராஜ் தலைமையிலான அதிகாரிகள் அந்த ஐம்பொன் சிலையை  எடைபோட்டு  காண்பித்தனர். 

 

ig

 

 

 

 

அதன் பிறகு பிரத்தியேகமாக  செய்யப்பட்ட பெட்டியில் பேக்கிங்  செய்யப்பட்டு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காக்கிகளிடம் ஒப்படைத்தனர்.  இப்படி  ஒப்படைக்கப்பட்ட ஐம்பொன் சிலையை  மலையிலிருந்து விஞ்சு (ரயில் )மூலம் அடிவாரத்திற்கு கொண்டுவரப்பட்டது இப்படி கொண்டுவரப்பட்ட அந்த ஐம்பொன் சிலையை வேன் மூலம் ஏற்றி கும்பகோணத்திற்கு கொண்டு சென்றனர். இதுபற்றி ஏ.டி.எஸ்.பி ராஜாராம்மிடம் பத்திரிக்கையாளர்கள் கேட்டபோது.. கோர்ட் உத்திரவுபடி அந்த ஐம்பொன் சிலையை  கோவில் அதிகாரிகள் எங்களிடம் ஒப்படைத்து  இருக்கிறார்கள் அதை நாங்கள் கும்பகோணம் கோர்ட்டில் நீதிபதி முன் காட்டிய பிறகு திருநாகேஸ்வரத்தில் உள்ள சிலைகள் காப்பகத்தில் ஒப்படைக்கப்படும். அதன் பிறகு கோர்ட் எப்பொழுது இந்த சிலையை திரும்பவும் பழனிக்கு கொண்டுபோக அணையிடும்பொழுது கொண்டுவருவோம் என்று கூறினார். ஆனால் இந்த  ஐம்பொன் சிலையை மலையில் இருந்து கொண்டு  வந்ததை பார்க்கமலை அடிவாரத்தில் ஏராளமான பக்தர்கள் குவிந்திருந்தனர்.

சார்ந்த செய்திகள்