இந்தியாவில் கரோனாவின் இரண்டாம் அலை மிகத் தீவிரமாக இருந்துவருகிறது. அதன் தாக்கம் தமிழகத்திலும் அதிக அளவில் இருந்து வருகிறது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் வசதியுடனான படுக்கைகள் இல்லாததால் தொற்று பாதித்தவர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதற்காக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. இன்னும் சில தினங்களில் மதுரையில் கூடுதலாக ஆக்ஸிஜன் வசதியுடன் படுக்கைகள் ஏற்பாடு செய்யப்படும் என அறிவித்துள்ளது. அதேவேளையில் தமிழகத்தின் ஆக்ஸிஜன் தேவையும் தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. அதனை சமாளிக்க தமிழக அரசு மத்திய அரசிடம் கூடுதல் ஆக்ஸிஜன் ஒதுக்க வேண்டும் என்று கேட்டு மத்திய அரசும் கூடுதல் ஆக்ஸிஜனை தமிழகத்திற்கு ஒதுக்கியிருந்தது. இந்நிலையில் தற்போது மேற்கு வங்கத்திலிருந்து ரயில் மூலமாக ஆக்ஸிஜன் கொண்டுவரப்பட்டது. அதனை ஊழியர்கள் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டிருக்கும் ஆக்ஸிஜன் சேமிப்பில் ஊழியர்கள் நிரப்பினர்.