கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு சென்னை குரோம்பேட்டை சேர்ந்த சுபஸ்ரீ என்பவர் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற போது அதிமுகவினர் சாலையின் நடுவே வைக்கப்பட்ட டிஜிட்டல் பேனர் காற்றடித்து திடிரென்று சாய்ந்தது. அப்போது சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற சுபஸ்ரீ என்ற பெண் மீது டிஜிட்டல் பேனர் விழுந்ததில் நிலைத்தடுமாறி கீழே விழுந்தார். அப்போது அதே திசையில் பின்னால் வந்த தண்ணீர் லாரி அதிவேகமாக மோதிய விபத்தில் சுபஸ்ரீ சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
அதனால் உடனே தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சியினர் டிஜிட்டல் பேனர்களை உடனே அகற்ற தமிழக காவல்துறை அதிகாரிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு வழங்கப்பட்டது.
நீதிமன்ற உத்தரவின் படி விழுப்புரம் மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் அவர்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சியினரும் வைக்கப்பட்ட டிஜிட்டல் பேனர்களை உடனே அகற்ற அந்த அந்த காவல் சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வைத்திருந்த டிஜிட்டல் பேனர்களை போலீசார் அகற்றினார்கள்.
இந்நிலையில் மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன், மாவட்ட எஸ் பி ஜெயக்குமார் ஆகிய மாவட்ட அதிகாரிகளின் உத்தரவின்படி உளுந்தூர்பேட்டை சரகத்திற்கு உட்பட்ட உளுந்தூர்பேட்டை, திருநாவலூர், திருவெண்ணெய்நல்லூர், எலவனாசூர்கோட்டை, எடைக்கல் ஆகிய காவல் நிலையம் எல்லை பகுதியில் உள்ள டிஜிட்டல் பேனர் உரிமையாளர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள், டிஜிட்டல் பேனர்களை கட்டும் கூலித்தொழிலாளிகள் என அனைவருக்கும் உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்தில் டிஎஸ்பி பாலசந்தர் அவர்கள் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றபோது டிஜிட்டல் பேனர்கள் அடித்தால் கடைக்கு சீல் வைத்து பூட்டுகள் போட்டு பூட்டி உரிமையாளர்கள் மீதும், பேனர் வைப்பவர் மீதும் நடவடிக்கை எடுக்க மாவட்ட கலெக்டர் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உத்தரவுப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கபடும் என கூறினார்.
அப்போது இன்ஸ்பெக்டர்கள் விஜி, பத்மா, சப்-இன்ஸ்பெக்டர்கள் கோபி, மாணிக்கம் மற்றும் அனைத்து அரசியல் கட்சியினரும் கலந்து கொண்டனர்.