துணை முதல்வர் ஓபிஎஸ் சீரிய முயற்சியால் தமிழக அரசு தேனி மாவட்டத்தில் உள்ள போடி சட்டமன்றத் தொகுதியில் புதிதாக அரசு சட்டக் கல்லூரி தொடங்கிட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

துணை முதல்வர் ஓபிஎஸ் அரசு சட்டக் கல்லூரி நடப்பு கல்வியாண்டு முதல் செயல்படுத்திட, அரசு கல்லூரி கட்டுவதற்காக போடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தப்பு கொண்டு கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அருகில் உள்ள இடத்தினை தற்காலிகமாக செயல்பட உள்ள உப்பார்பட்டி சந்திரகுப்த மௌரிய இன்டர்நேஷனல் பள்ளி அணியும் மாவட்ட ஆட்சித்தலைவர் பல்லவி பலர் முன்னிலையில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தரம் வாய்ந்த கல்வியை ஏழை எளிய மாணவ, மாணவிகளுக்கு வழங்கும் பொருட்டு மாநிலத்தின் மொத்த வருவாயில் நான்கில் ஒரு பகுதி நிதியினை கல்வி வளர்ச்சிக்காக ஒதுக்கீடு செய்து எண்ணற்ற கல்வி சார்ந்த பல்வேறு திட்டங்களை தீட்டி சிறப்பாகவும் செம்மையாகவும் செயல்படுத்தினார். அவர் கடந்த 2011ஆம் ஆண்டு முதலமைச்சராக பொறுப்பேற்றதிலிருந்து கல்விக்கு 20 ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்து வந்தார். தற்போது படிப்படியாக உயர்ந்து பள்ளிக் கல்வித் துறைக்கு 33 ஆயிரம் கோடி ரூபாய் உயர் கல்வித்துறைக்கு 4000 கோடி கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது.
தமிழக அரசு தேனி மாவட்டங்களில் கோரிக்கையினை ஏற்று அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரி அரசு பொறியியல் கல்லூரி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. மேலும் தற்போது நமது மாவட்டத்தில் சட்ட கல்லூரி தமிழ்நாடு சட்டப்பேரவை 110 விதியின் கீழ் புதிதாக அரசு சட்டக் கல்லூரியை தொடங்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் நடப்பு கல்வியாண்டு முதல் செயல்படுத்திட பல்வேறு இடங்களில் இடத்தேர்வு செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இடம் தேர்வு செய்யும் பணிகள் நிறைவடைந்த உடன் மாணவ-மாணவிகளில் சேர்க்கைகான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளது என்று கூறினார்.
இந்த ஆய்வின்போது கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ஜக்கையன் மாவட்ட வருவாய் அலுவலர் கந்தசாமி பெரியகுளம் வருவாய் கோட்டாட்சியர் ஜெயப்பிரதா முதன்மை கல்வி அலுவலர் ரேணுகா தேவி துணை ஆட்சியர் நிறைமதி வட்டாட்சியர் செந்தில் முருகன் உள்பட சில அதிகாரிகளும்
கலந்து கொண்டனர்.