வங்கக்கடலில் இராமநாதபுரத்திற்கு 40 கி.மீ. தொலைவில் 30 மணி நேரமாக காற்றழுத்த தாழ்வு மண்டலம் நீடிக்கிறது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் அதே இடத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழக்கும். காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்தாலும் இன்றும், நாளையும் கனமழை தொடரும்.
கடலூர் மாவட்டத்தின் கொத்தவாச்சேரியில் 18 செ.மீ., புவனகிரியில் 15 செ.மீ., சேத்தியாத்தோப்பில் 14 செ.மீ. மழை பதிவானது. அதேபோல் ஸ்ரீமுஷ்ணத்தில் 11 செ.மீ., அண்ணாமலை நகர், பெலாந்துறையில் தலா 9 செ.மீ., சிதம்பரத்தில் 8 செ.மீ., குடவாசலில் 15 செ.மீ., நன்னிலம், திருவாரூர், வலங்கைமான், நீடாமங்களம், திருத்துறைப்பூண்டியில் தலா 6 செ.மீ., தரங்கம்பாடியில் 11 செ.மீ., சீர்காழி, மயிலாடுதுறையில் தலா 7 செ.மீ., திருப்பூண்டி, தலைஞாயிறில் தலா 6 செ.மீ. மழை பதிவானது.
திருவள்ளூர் மாவட்டத்தின் ஊத்துக்கோட்டையில் 9 செ.மீ., கும்மிடிப்பூண்டியில் 8 செ.மீ., பூந்தமல்லியில் 7 செ.மீ., சோழவரத்தில் 5 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இராமநாதபுரம் மாவட்டத்தின் ராமேஸ்வரத்தில் 11 செ.மீ., தங்கச்சிமடத்தில் 7 செ.மீ., பாம்பனில் 6 செ.மீ. மழை பதிவானது. திருவண்ணாமலை மாவட்டத்தின் வேம்பாக்கத்தில் 11 செ.மீ., சேத்பட்டில் 6 செ.மீ. செய்யாறில் 5 செ.மீ. மழை பதிவானது. சென்னையில் மைலாப்பூரில் 12 செ.மீ., கிண்டியில் 11 செ.மீ., மாம்பலத்தில் 9 செ.மீ., சோழிங்கநல்லூர், அயனாவரத்தில் 7 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனிடையே, சென்னையில் பல்வேறு இடங்களில் மீண்டும் கனமழை பெய்து வருகிறது.