Skip to main content

இறந்தவரின் உடலை ஆந்திராவில் இருந்து தேனி  கொண்டு வர உதவி  செய்த ஓபிஎஸ்!

Published on 25/12/2018 | Edited on 25/12/2018
a

 

துணை முதல்வர் ஓபிஎஸ் தொகுதியான போடி தொகுதியில் இருக்கும் பி.சி. பட்டியில் குடியிருந்து வருபவர் கூலித்தொழிலாளியான சபரி மூர்த்தி.  இந்த கூலித்தொழிலாளியான சபரிமூர்த்தி வேலை தேடி ஆந்திராவில் உள்ள விஜயவாடாவுக்கு சென்று கூலி வேலை பார்த்து வந்தார்.  அப்பொழுது உடல்நலக்குறைவால் திடீரென  விஜயவாடாவில் சபரி மூர்த்தி இறந்துவிட்டார். 

 

 இந்த விஷயம் பிசி பட்டியிலுள்ள மனைவி சண்முக ஈஸ்வரிக்கும், மகன் காளிராஜ் மகள் மகேஸ்வரிக்கும் தெரியவே பதறிபோய் விட்டனர்.  
ஆனால் ஆந்திராவில் இருந்து சபரி மூர்த்தியின் உடலை கொண்டுவர வசதி இல்லாததால்  மனைவி சண்முக ஈஸ்வரி  மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ்விடம்  ஆந்திராவில் உள்ள விஜயவாடாவில் இறந்த என் கணவரின் உடலை கொண்டு வர உதவி செய்ய வேண்டும் என்று மனு கொடுத்தார்.

 

a


 இந்த விஷயம் துணை முதல்வரான ஓபிஎஸ் காதுக்கு எட்டவே உடனே தனது ஆதரவாளர்களான சுப்புராஜ் உள்பட சிலரை அழைத்து பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு 50 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை கொடுக்கச் சொல்லியும் ஆந்திராவில் உள்ள விஜயவாடாவில் இறந்த சபரி மூர்த்தியின் உடலை தேனிக்கு கொண்டுவர ஏற்பாடு செய்யச் சொன்னார். அதன் அடிப்படையில் ஓபிஎஸ் ஆதரவாளர்களான சுப்புராஜ் உள்பட சிலர் மாவட்ட கலெக்டரை சந்தித்து ஒபிஎஸ் கொடுத்த 50 ஆயிரத்தையும் கொடுத்து தகவல் கூறினார்கள்.   உடனே மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ்வும்  பாதிக்கப்பட்ட சபரிமூர்த்தியின் குடும்பத்திற்கு  ஓபிஎஸ் கொடுத்த ஐம்பதாயிரத்தை கொடுத்து விஜயவாடாவில் இறந்த சபரி மூர்த்தியின் உடலை கொண்டுவர ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்து கொடுத்தார். அதனடிப்படையில் சபரி மூர்த்தியின் உறவினர்கள் ஆந்திரா மாநிலத்தில் உள்ள விஜயவாடா அரசு மருத்துவமனையில் வைத்திருக்கும் சபரி மூர்த்தியின் உடலை கொண்டு வர புறப்பட்டனர்.

 

சார்ந்த செய்திகள்