சிதம்பரம் தலைமை அஞ்சல் நிலையத்தில் இயங்கி வருகின்ற ஆர்.எம்.எஸ் சேவையை சிக்கன நடவடிக்கை என்ற பெயரில் மத்திய அரசு மாவட்டத்திற்கு ஒரு ஆர்எம்எஸ் சேவை என்ற அடிப்படையில் சிதம்பரம் பிரிவை மூடிவிட்டு விருத்தாசலம் ஆர்எம்எஸ் சேவை பிரிவுடன் இணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.
இதனால் இந்த பகுதியிலுள்ள மக்களுக்கான ஆஞ்சல் சேவைகளை முடக்ககூடியதாக இருக்கும். எனவே இந்த முடிவை கைவிட கோரி சிதம்பரம் தலைமை அஞ்சல் நிலையத்திற்கு முன் மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நகர்க்குழு உறுப்பினர் சின்னையன் தலைமை வகித்தார். அனைத்து துறை ஓய்வூதியர்கள் சங்க வட்டத்தலைவர் கலியமூர்த்தி முன்னிலை வகித்தார். கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர்கள் மூசா, மாதவன், நகர செயலாளர் பாரதி மோகன், மாவட்டக்குழு முத்து, அனைத்து ஓய்வூதியர்கள் சங்க வட்டசெயலாளர் பன்னீர்செல்வம்,இந்திய மாணவர் சங்க மாவட்ட தலைவர் குமரவேல், அண்ணாமலைநகர் பேரூர் செயலாளர் கோபால் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு ஆர்எம்எஸ் சேவை பிரிவை சிதம்பரத்திலிருந்து நீக்கும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன கோசங்களை எழுப்பினார்கள்.