ஓபிஎஸ்க்கு இபிஎஸ் அணி உற்சாக வரவேற்பு!
ஒண்டிவீரன் நினைவு இடத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் நேற்று இரவு ராஜபாளையம் சென்றார். அங்கு ஓய்வு எடுத்து விட்டு இன்று காலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் சங்கரன்கோவில் வழியாக நெல்லை மாவட்டத்தில் உள்ள நெட்கட்டுசேவல் கிராமத்தில் இருக்கும் ஒண்டிவீரன் நினைவு இடத்திற்கு சென்று மலர் வலையம் வைத்து வீரஅஞ்சலி செலுத்தினர்.
தற்போது ஓபிஎஸ் - இபிஎஸ் அணிகள் நாளை இணைய போவதாக பேச்சு அடிபட்டு வருவதையொட்டி ஓபிஎஸ் நினைவு இடத்திற்கு வந்ததை முன்னிட்டு வழி நெடுகவும் ஓபிஎஸ் ஆதரவாளர்களுடன் இபிஎஸ் ஆதரவாளர்களும் சேர்ந்து ஓபிஎஸ்க்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர். அதை தொடர்ந்து வழக்கத்துக்கு மாறாக ஓபிஎஸ் பின்னால் 500க்கும் மேற்பட்ட கார்கள் புடைசூழ சென்றதை கண்டு டிடிவி அணியினரும் மாற்று கட்சியினரும் அரண்டு போய்விட்டனர்.
- சக்தி