கிணற்றை தானமாக எழுதி கொடுக்க ஓ.பி.எஸ் சம்மதம்!
பத்திரமும் ரெடி!!
கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக பெரியகுளம் அருகே உள்ள லட்சுமிபுரம் கிராம மக்கள் ஒபிஎஸ்சின் கிணற்றை எழுதி கொடுக்க சொல்லி தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர். இந்த நிலையில் தான் அரசியலிலும் பரபரப்பு ஏற்பட்டு ஓபிஎஸ் - இபிஎஸ் அணிகள் இணையும் தருவாயில் இருக்கும் போது, ஓபிஎஸ் திடீரென தனது ஆதரவாளர் சுப்புராஜ்க்கு போன் மூலம் தொடர்பு கொண்ட ஓபிஎஸ்சோ. லட்சுமிபுரம் மக்களின் வேண்டுகோள்படி கோம்பை அடிவாரத்தில் கிணற்றுடன் சேர்ந்து 18 சென்ட்டு நிலத்தை எழுதி கொடுக்க உத்தரவிட்டுள்ளார்.
அதை தொடர்ந்து ஓபிஎஸ்சின் ஆதரவாளர் சுப்புராஜ் இருபது ரூபாய் பத்திரத்தில் வரும் 21ம்தேதி எழுதி கொடுப்பதாக ஊர் பிரமுகர்கள் ஜெயபால், கார்த்திக், ரவி உள்பட சிலர் முன்னிலையில் எழுதி கொடுத்தார். ஒபிஎஸ் சார்பில் சுப்புராஜூடன், சுப்பு, கோபாலபுரம் முருகன் ஆகியோர் கலந்து கொண்டு கிணறு மற்றும் அதைச் சுற்றியுள்ள 18 சென்ட்டு நிலத்தையும் அளந்தும் காண்பித்தார்கள். ஆக லட்சுமிபதிபுரம் மக்களின் குடிநீர் பிரச்சினை ஓபிஎஸ் மூலம் தீர்வாகி விட்டது.
- சக்தி