Skip to main content

''ஆப்ரேசன் விநாயகா''; அசராத காட்டுயானை;அசத்திய வனத்துறை!!

Published on 18/12/2018 | Edited on 18/12/2018

கோவை மாவட்டம் ஆனைகாடு, தடாகம்,மாங்கரை பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிக அளவில் காணப்பட்டது. இந்த பகுதிகளுக்கு அடிக்கடி   வரும் 50க்கும் மேற்பட்ட காட்டுயானைகள் குடியிருப்புகளையும், விவசாய நிலங்களையும் சேதப்படுத்தியதால் அவற்றை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டும்படி   வனத்துறைக்கு  பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்திருந்தனர்.

 

elephant

 

இதனையடுத்து சேரன், விஜய், பொம்பன், வசீம் ஆகிய நான்கு கும்கி யானைகள் சுமார் 2 மாதங்களுக்கு முன்பே வரவழைக்கப்பட்டு பெரும்பாலான காட்டு யானைகள் காட்டிற்குள் விரட்டிக்கப்பட்டது. ஆனாலும் விநாயகன் மற்றும் சின்னத்தம்பி என்ற இரண்டு காட்டு யானைகள் மட்டும் அப்பகுதியிலிருந்து செல்லாமல் தொடர்ந்து அங்கேயே நடமாடி வந்தன. இந்த இரண்டு யானைகளும் தொடர்ந்து விவசாய நிலங்களை சேதப்படுத்தியதாக அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டை எழுப்பினர். அதனையடுத்து வனத்துறையினர் அந்த இரண்டு யானைகளையும் அடர் வனப் பகுதிக்கு துரத்தியடிப்பதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு ''ஆப்ரேஷன் விநாயகா'' என்ற ஒரு திட்டத்தை வகுத்தனர். 

 

elephant

 

அதன்படி இன்று காலை பெரிய தடாகம் பகுதியில் காட்டு யானை விநாயகனை சுற்றிவளைத்தனர். மேலும் அந்த யானைக்கு வனத்துறை மருத்துவர் மனோகரன் தலைமையிலான மருத்துவர் குழு துப்பாக்கி மூலம் மயக்க ஊசி செலுத்தினர். ஆனால் அப்படி துப்பாக்கியில் மயக்க ஊசி செலுத்தியும் அந்த யானை அதே இடத்தில் நின்று கொண்டிருந்தது. அதனைத் தொடர்ந்து மேலும் இரண்டு மயக்க ஊசி செலுத்தப்பட்டது. அதன் பிறகும் காட்டுயானை நகர்ந்த பாடில்லை. அதன் பிறகு கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டு லாரியில் ஏற்ற முயற்சித்தனர். வனத்துறையின் முயற்சிகள் எதுவும் பயனளிக்காத நிலையில் காட்டு யானை விநாயகன் அதே இடத்தில் நின்று கொண்டிருந்தது. இதனையடுத்து மேலும்  நான்காவதாக மயக்க ஊசியை மருத்துவர்கள் செலுத்தியதால் விநாயகன் சோர்வடைந்தது இதையடுத்து லாரியில் ஏற்றப்பட்ட விநாயகன் முதுமலைக்கு கொண்டுசெல்லப்பட்டது. 

 

 

 

சார்ந்த செய்திகள்