





Published on 11/10/2021 | Edited on 11/10/2021
சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ் வளாகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் பயிற்சி பெற்ற அறுவை அரங்கு நுட்புனர்களுக்கான கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அரசு மருத்துவக் கல்லூரிகளில் பயிற்சி பெற்ற அறுவை அரங்கு நுட்புனர்கள் தங்களுக்கு அரசுப் பணி வழங்கக் கோரி டி.எம். எஸ். வளாகம் உள்ளே இன்று (11.10.2021) காலை 11:00 மணியளவில் மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.