கரோனா வைரஸ் பராவாமல் தடுக்க கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும். தனிமையில் இருக்க வேண்டும் என்று எல்லோரும் அறிவுறுத்தி வருகின்றனர். இதனால் பெரும்பாலான மக்கள் வீட்டிலேயே முடங்கி இருக்கும் நிலையில் மதுரை அண்ணா நகரில் இன்று புதிதாக திறக்கப்பட்ட பிரியாணிக் கடையில் இன்று ஒரு நாள் சலுகையாக ஒரு ரூபாய்க்கு பிரியாணி என விளம்பரத்தால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமானோர் முகக்கவசம் இன்றி நீண்ட வரிசையில் நின்று வாங்கி சென்றனர்.
பிரியாணி வழங்கியவர்களும் எந்த ஒரு முகக்கவசமோ, பாதுகாப்பு உபகரணங்களோ அணியாமல் இருந்தனர். மேலும் இது போன்ற கூட்டம் கூடுவதை தவிர்த்து கரோனா தாக்குதலில் இருந்து தப்ப தான் நேற்றைய தினம் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்ட நிலையில் மறுநாளே 1 ரூபாய்க்கு பிரியாணி என விளம்பரத்தால் பொதுமக்கள் எல்லா பாதுகாப்பையும் மறந்து ஒரே இடத்தில் 100க்கும் மேற்பட்டோர் கூடி வரிசையில் நின்ற செயல் சமூக ஆர்வலர்களை வேதனையடைய செய்துள்ளது.