!['Omigron': Central Committee visits Tamil Nadu!](http://image.nakkheeran.in/cdn/farfuture/0EH2eF2lleTFcEnCVPcYbolbljmuRrtU3FlsmdJ-rDc/1640576324/sites/default/files/inline-images/airport43422.jpg)
'ஒமிக்ரான்' பரவல் குறித்து ஆய்வு மேற்கொள்வதற்காக மத்திய அரசு அமைத்துள்ள மத்திய குழு தமிழ்நாட்டிற்கு வந்தது.
தமிழ்நாட்டில் இதுவரை 34 பேருக்கு 'ஒமிக்ரான்' பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், மத்திய சுகாதாரத்துறையைச் சேர்ந்த வல்லுநர்களான மருத்துவர்கள் வினிதா, சந்தோஷ் குமார், தினேஷ் குமார் ஆகியோர் கொண்ட மத்திய குழுவினர் தமிழ்நாட்டிற்கு வந்தடைந்தனர். சென்னை விமான நிலையத்திற்கு வந்த மத்திய குழுவுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர் தமிழ்நாடு அரசு அதிகாரிகள்.
தமிழ்நாட்டில் மூன்று நாட்கள் தங்கியிருந்து மத்திய குழு ஆய்வு மேற்கொள்ள உள்ளதாகவும், 'ஒமிக்ரான்' மற்றும் கரோனாவை கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மாநில சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு பரிந்துரைகளை வழங்குவார்கள் எனவும் கூறப்படுகிறது.
'ஒமிக்ரான்' நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள், வெண்டிலேட்டர் வசதிகள் உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்து, மத்திய அரசுக்கு மத்திய குழு அறிக்கை அளிக்க உள்ளது.