வங்கியில் கொள்ளை முயற்சி சிக்கிய முதியவர்
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே புளியமரத்துக்கோட்டையில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் நேற்று அதிகாலை 3 மணியளவில், கொள்ளையடிக்க 5 பேர் கும்பல் வந்தது. கொள்ளை முயற்சியின்போது சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். அவர்களை பார்த்ததும் கும்பலில் 4 பேர் தப்பி ஓடினர். சிக்கியவரை பிடித்து மரத்தில் கட்டி பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர். தகவலறிந்து வேடசந்தூர் போலீசார் வந்து அவரை மீட்டனர். விசாரணையில் அவர், செங்காட்டூரை சேர்ந்த முனியப்பன் (60) என தெரிந்தது. காயமடைந்த அவரை சிகிச்சைக்காக வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.