ஆவின் டிலைட் பசும்பால் மறு அறிமுக விழா
ஆவின் நிறுவனத்தில் நேற்று (08-09-2017) பால்வளத்றை அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி தலைமையில், கூட்டுறவு இணையத்தின் தலைவர் அ. மில்லர் மற்றும் கால்நடை பராமரிப்பு, பால்வளத்தறை மற்றும் மீன்வளத்துறை முதன்மைச் செயலர் மருத்துவர். கே. கோபால், இ.ஆ.ப. முன்னிலையில், 4 வகையான புதிய ஐஸ்கீரிம், சென்னை மாநகர் மக்களுக்காக ரூ-10/- க்கான 225 மி.லி. கொண்ட 4.5% கொழுப்புச் சத்து, 8.5% இதரச் சத்துக்கள் அடங்கிய புதிய பால் பாக்கெட் மற்றும் 90 நாட்கள் கெடாமல் இருக்கும் 1/2 லிட்டர் ஆவின் டிலைட் பசும்பால் பாக்கெட் மறு அறிமுகம் செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஒய்வு பெற்ற ஆவின் நிறுவனப் பணியாளர்களுக்கு தினமும் அரை லிட்டர் விலையில்லா பால் வழங்குவதற்கான மாதாந்திர பால் அட்டை வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் ஆவின் நிர்வாக இயக்குநர் சி. காமராஜ், இ.ஆ.ப. இணை நிர்வாக இயக்குநர் ஆர். சீத்தாலட்சுமி, இ.ஆ.ப. துணைப்பால் ஆணையர் உ. சண்முகராஜ்குமார் மற்றும் ஆவின் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
படங்கள்: அசோக்குமார்