Published on 26/08/2021 | Edited on 26/08/2021
திருச்சி உறையூர் மீன் மார்க்கெட் பகுதியில் இன்று (26.08.2021) உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் ஆய்வு மேற்கொண்டனர். அதில் ஐந்து மொத்த விற்பனையாளர்கள் மற்றும் 9 சில்லறை விற்பனையாளர்களுக்கு சொந்தமான மீன்களை சோதனை செய்ததில், சுமார் 650 கிலோ கெட்டுப்போன மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன.
மேலும், அவர்களுக்கு சொந்தமான குளிர்சாதன வசதியுடன் கூடிய கண்டெய்னர்களை சோதனை செய்துள்ளனர். மேலும், மொத்த விற்பனையாளர்கள் மற்றும் சொற்ப அளவில் சில்லரை விற்பனையாளர்களை நேரில் சந்தித்து, இனி இதுபோன்ற கெட்டுப்போன மீன்களை விற்பனை செய்தால் சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, மீன் விற்பனை செய்யும் கடைகளும் சீல் வைக்கப்படும் என்று எச்சரித்துள்ளனர்.