திருச்சியில் மாவட்ட அளவிலும், மாநகராட்சி அளவிலும் நடத்தப்படும் அரசு நிகழ்ச்சியில், விழாக்களில் யாருடைய பெயரை தலைமையாக போடுவது என்பது பிரச்சனையில் வாங்கிய திட்டுகளில் தற்போது ஆளுங்கட்சி அமைச்சர்களி்ன் பெயர்களை தவிர்த்து விட்டு அரசு அதிகாரிகளோ திறப்பாளர்களாக மாறிய கதை திருச்சியில் நடைபெற்று வருகிறது.
சமீபத்தில் எம்.பி. நிதியில் கமிஷனர் தலைமையில் கண்காணிப்பு கேமிரா துவங்கும் நிகழ்ச்சியை பார்வையிட்டு துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் கமிஷனர் அலுவலகம் சார்பில் அமைச்சர்களுக்கு தகவல் கொடுக்கவில்லை என்பதால் அமைச்சர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை.
இதனால் அதிர்ச்சியடைந்த இரண்டு பேரும் முதல்வர் எடப்பாடி வரை சென்று, எங்களை புறக்கணித்து இந்த அதிகாரிகள் எங்களை நிகழ்ச்சிக்கு அழைப்பதில்லை என்று பகிரங்கமாக குற்றச்சாட்டு வைத்தனர். நீங்க என்னான்னு கண்டிங்க என்று அமைச்சர்கள் இரண்டு பேரும் கோரிக்கை வைக்க, உடனே முதல்வரும் திருச்சி மாவட்ட கலெக்டரையும், மாநகராட்சி ஆணையர் ரவிசந்திரனையும் போனில் அழைத்து கண்டித்து எல்லோருக்கும் அழைப்பு கொடுத்து நிகழ்ச்சி நடத்துங்கள் என்று அறிவுறுத்தப்பட்டனர்.
இதன் பிறகு நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர்களும், எம்.பியும் இணைந்து கலந்து கொண்டு வந்தனர். இந்த நிலையில்.. கடந்த வாரம் திருச்சி தொகுதி எம்.பியும், அதிமுக மாவட்ட செயலாளருமான குமார் எம்பியின் தொகுதி வளர்ச்சி நிதி உதவியின் கீழ் திருச்சி மாநகராட்சி பகுதிக்குட்பட்ட இடங்களில் ரேஷன் கடைகள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.
எம்பி நிதியில் நடைபெறும் பணிகள் என்பதால் எம்பி குமார் தலைமையில் விழா நடைபெற்றது. திருச்சி அதிமுகவை பொறுத்தவரை எம்பி குமார் மாவட்ட செயலாளரான பிறகு அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி ஆகியோர் தனி கோஷ்டியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்கள்.
இதற்கு முக்கிய காரணம் மாஜி மாவட்ட செயலாளர் மற்றும் அமைச்சர் என்ற அடிப்படையில் வெல்லமண்டி நடராஜனுக்கு மாவட்ட மற்றும் மாநகராட்சி நிகழ்ச்சிகளில் கொடுக்கப்படுவது போன்றே தற்போதும் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பதே.
இத்தகைய சூழ்நிலையில் எம்.பி குமார் பெயரை யார் தலைமையாக போட்டது என்று அமைச்சரின் மகன் ஜவஹர்லால் நேரு சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு போன் போட்ட அமைச்சர், மகன் அழைப்பிதழ் ரெடி பண்ணுனது யார்? என்று கேட்டிருக்கிறார். இதனால் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.
இதனால் கூப்பிட்டாலும் தப்பு கூப்பிடலனாலும் தப்பு என்று முடிவு செய்தார்களோ என்னவோ, திருச்சி வேர்ஹஸ் அருகே உள்ள உடற்பயிற்சி விளையாட்டு மையத்தை அமைச்சர்கள், எம்.பிக்கள் என யாருக்கும் அழைப்பு கொடுக்காமல் திருச்சி மாநகராட்சி தலைமையில் திறந்து வைத்தனர். திறப்பாளர் மாநகராட்சி ஆணையர் ரவிசந்திரன் என்று கல்வெட்டும் பொறித்து வைத்து விட்டனர். தற்போது அமைச்சர்கள் உள்ளதும் போச்சோ என்று என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பி போய் நிற்கிறார்கள்.