அரும்பாக்கம் ராதாகிருஷ்ணன் நகரில் ஆக்கிரமிப்பு பகுதியில் குடியிருப்பவர்கள் மறுகுடியமர்வு செய்யும்வரை ஆக்கிரமிப்புகளை இடிக்கக் கூடாது என அறிவிப்பு வெளியாகியுள்ளது. அரும்பாக்கத்தில் ஏற்கனவே 93 ஆக்கிரமிப்பு குடியிருப்புகள் அகற்றப்பட்டு குடிசைப் பகுதி மக்கள் குடிசை மாற்றுவாரிய குடியிருப்புகளில் மறுகுடியமர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், மக்கள் அனைவருக்கும் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் வீடுகள் ஒதுக்கீடு செய்து மறுகுடியமர்வு செய்து தரப்படும்வரை ஆக்கிரமிப்புகளை இடிக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சென்னை அரும்பாக்கம் ராதாகிருஷ்ணன் நகரில் கிட்டத்தட்ட 243 குடியிருப்புகள் இருந்து வருகிறது. கரை ஓரம் இருப்பதால் வெள்ளப்பெருக்கு உள்ளிட்ட இயற்கை பேரிடர்கள் வரும்பொழுது மக்களுக்கு மிகப் பெரிய இடர்பாடு ஏற்படுகிறது. இதனால் அவர்களுக்கு மாற்று இடம் கொடுக்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சி ஏற்பாடு செய்து தொடர்ந்து அந்த மக்களுக்கு குடிசைமாற்று குடியிருப்புகளை ஒதுக்கீடு செய்தது. அதனடிப்படையில் கிட்டத்தட்ட 243 வீடுகளில் படிப்படியாக 93 பேருக்கு கே.பி.குப்பம் பகுதியில் வீடும் கொடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. பூர்வகுடி மக்களை சென்னைக்கு அப்பாற்பட்டு குடியமர்த்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. எனவே இங்கிருந்து மக்களை பூர்வகுடி மக்களை அகற்றக்கூடாது என கோரிக்கை எழுந்ததன் அடிப்படையில் சென்னை மாநகராட்சி அது குறித்து பரிசீலனை செய்து வருகிறது.
10 குடும்பத்தை சேர்ந்த மக்கள் எங்களுக்கும் வீடுகள் ஒதுக்கித் தர வேண்டும் என மாநகராட்சியும் கோரிக்கை வைத்திருந்தனர். இருப்பினும் இதற்கு முன்பாகவே கணக்கீடு செய்யப்பட்டபடி கரையோரம் இருக்கக்கூடிய வீடுகள் ரேஷன் அட்டைதாரர்கள், ஆதார் அட்டை உள்ளவர்களுக்கு அனைவருக்கும் வீடு ஒதுக்கீடு தரப்படும் என்று சென்னை மாநகராட்சி விளக்கம் கொடுத்திருந்தது. அந்த அடிப்படையில் மக்களுக்கு வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் அரும்பாக்கம் ராதாகிருஷ்ணன் நகரில் ஆக்கிரமிப்பு பகுதியில் குடியிருப்பவர்கள் மறுகுடியமர்வு செய்யும் வரை ஆக்கிரமிப்புகளை இடிக்கக் கூடாது என அறிவிப்பு வெளியாகியுள்ளது.