என்று இன்று ஈரோடு கருங்கல்பாளையம் காமராஜர் மேல்நிலை பள்ளி முன்பு நின்று அரசு ஊழியர்கள் சாலையில் சென்ற மக்களை அழைக்க, எதுக்கப்பா? என்னப்பா தேர்தல்? ஈரோடு எம்.எல்.ஏ. நல்லாத்தானே இருக்காரு, இப்படியொரு தேர்தல்னு தேர்தல் கமிஷன் அறிவிக்க வே இல்லையே என்ற பல கேள்விகள் குழப்பத்துடன் மக்களில் சிலர் பள்ளிக்குள் சென்றனர் அதன் பிறகு தான் தெரிந்தது.
தமிழகத்தில் நடக்கவுள்ள உள்ளாட்சித் தேர்தலுக்கான மாதிரி ஒட்டுப்பதிவு என்பது. உள்ளாட்சி தேர்தலுக்கு அந்தந்த மாவட்ட நிர்வாகம் ஏற்பாடுகளை செய்து வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்கான பணிகள் இதன் மூலம் தொடங்கியிருக்கிறது.
சென்ற 5-ஆம் தேதி உள்ளாட்சித் தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை ஈரோடு கலெக்டர் கதிரவன் வெளியிட்டார். இதனைத் தொடர்ந்து வந்த வாக்காளர்பட்டியல் ஈரோடு மாநகராட்சி அலுவலகம், மண்டல அலுவலகங்களில் பொதுமக்கள் பார்வைக்காக ஒட்டப்பட்டது.
ஈரோடு மாவட்டம் முழுவதும் உள்ளாட்சித் தேர்தலில் மொத்தம் 8798 எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதில் 5887 வாக்குப்பதிவு எந்திரங்களும் 2921 கண்ட்ரோல் யூனிட் எந்திரங்களும் அடங்கும்.
இந்த எந்திரங்கள் ஈரோடு கருங்கல்பாளையம் காமராஜ் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் ஸ்டாக் வைக்கப்பட்டுள்ளது. சில நாட்களுக்கு முன்பு கர்நாடகாவில் நடந்த தேர்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்கு எந்திரங்கள் தான் அவை. அங்கிருந்து இங்கு கொண்டு வரப்பட்டு வைக்கப்பட்டுள்ளது. இந்த வாக்குப்பதிவு எந்திரங்கள் முறையாக செயல்படுகிறதா? என்பதை பரிசோதிக்கும் வகையில் இன்று கருங்கல்பாளையம் காமராஜ் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் மாதிரி ஓட்டுப்பதிவு நடந்தது. இதில் ஈரோடு மாநகராட்சி நகராட்சி பேரூராட்சி யில் பணியாற்றும் ஊழியர்கள் பங்கேற்றனர். ஊழியர்கள், பொதுமக்கள் மாதிரி ஓட்டுகளை பதிவு செய்தனர். ஒரு எந்திரத்தில் ஆயிரம் ஓட்டுகள் பதிவாகி உள்ளதா என்று சோதனை செய்தனர். பல இயந்திரங்கள் பழுதாக பெல் கம்பெனியில் இருந்து வந்த இன்ஜினியர்கள் எந்திரத்தில் ஏற்பட்டிருந்த பழுதை சரி செய்தனர். இவை அரசியல் கட்சியின் பிரமுகர்கள் முன்னிலையில் நடந்தது. ஆனால் சின்னம் மட்டும் கட்சி சின்னம் இல்லை. இதனால் ஒட்டுப்போட்டவர்கள் ஏமாற்றத்துடன் காணப்பட்டனர்.