Published on 06/07/2018 | Edited on 06/07/2018

தேனி மாவட்டம் டி.கல்லுப்பட்டி கைலாசநாதர் கோயில் பூசாரி நாகமுத்து தற்கொலை வழக்கில் அரசு சிறப்பு வழக்கறிஞரை மாற்றக்கோரிய கோயில் பராமரிப்புக்குழு உறுப்பினர் லோகுவின் மனு மீதான விசாரணையில் திண்டுக்கல் ஆட்சியர், பெரியகுளம் டிஎஸ்பி, தென்கரை காவல் ஆய்வாளருக்கு உயர்நீதிமன்ற கிளை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சிறப்பு வழக்கறிஞர் பவானி மோகன் மற்றும் ஓபிஎஸ்-ன் சகோதரர் ஓ.ராஜாவுக்கும் மதுரை கிளை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
நாகமுத்து கடந்த 2012ம் ஆண்டு தற்கொலை செய்துகொண்டார். தற்கொலைக்கு ஓபிபிஎஸ் சகோதரர் ஓ.ராஜாதான் காரணம் என நாகமுத்து கடிதம் எழுதி வைத்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் சிறப்பு வழக்கறிஞர் பவானி மோகன் உள்நோக்கத்துடன், ஒருதலைபட்சமாக செயல்படுகிறார் என மனுவில் கூறப்பட்டுள்ளதால் அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.