புதுக்கோட்டை மாவட்டம் மன விடுதி பகுதியைச் சேர்ந்தவர் குழந்தைவேலு. இவரது மகள் சவுந்தரியா கடந்த இரண்டரை வருடமாக ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார். பணியின் காரணமாக மருத்துவமனையின் பின்பகுதியில் வீடு எடுத்துத் தங்கி இருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் சவுந்தர்யா சம்பவத்தன்று மருத்துவமனை வளாகத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனைத் தொடர்ந்து தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சவுந்தர்யாவை உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து சம்பவ தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் சவுந்தர்யா தற்கொலை செய்து கொல்வதற்கு முன்பு யாரிடமோ செல்போனியில் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருப்பதாகத் தெரியவந்துள்ளது.
இதனிடையே தகவலின் பேரில் ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு வந்த சவுந்தர்யாவின் பெற்றோர், உடலைப் பார்த்துக் கதறி அழுதனர். அப்போது தனது மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், அதனால் உரிய விசாரணை வேண்டும் எனவும் வீரப்பன்சத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனைத் தொடர்ந்து போலீசார் சவுந்தர்யாவின் மரணத்தை சந்தேக மரணம் என்று வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.