Skip to main content

அவதூறு வழக்கை ரத்து செய்யக்கோரிய சீமான்! -விசாரணைக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு!

Published on 02/03/2020 | Edited on 02/03/2020

தமிழக முதல்வர் குறித்து அவதூறாகப் பேசியதாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.

 

NTK leader seeman case issue

 



கடந்த ஆண்டு செப்டம்பர் 14-ஆம் தேதி தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழக அரசையும், முதல்வரையும் விமர்சித்துப் பேசியதாக செய்தி வெளியானது (மத்திய பாஜக அரசின் மேஸ்திரி போல தமிழக முதல்வர் செயல்படுவதாகப் பேசியிருந்தார்). அந்தக் கருத்தும், செய்தியும் தமிழக அரசுக்கும், முதல்வரின் பெயருக்கும் களங்கம் கற்பிக்கும் வகையில் இருப்பதாக சீமான் மீதும், தொலைக்காட்சி மீதும், அவதூறு சட்டப்பிரிவுகளின் கீழ் நடவடிக்கை மற்றும் தண்டிக்க வேண்டும் எனக் கோரி தமிழக முதல்வர் சார்பாக சென்னை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது.

 

  NTK leader seeman case issue



இந்நிலையில், தன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரியும் வழக்கில் நேரில் ஆஜராக விலக்கு அளிக்கக் கோரியும் சீமான் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி ஜி.கே.இளந்திரையனின் முன் விசாரணைக்கு வந்தது. பின்னர் விசாரணைக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்த நீதிபதி, வழக்கு விசாரணைக்கு சீமான் நேரில் ஆஜராகவும்,  மனு குறித்து பதில் அளிக்கவும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டு,  விசாரணையை  மார்ச் 23 -ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

 

சார்ந்த செய்திகள்