திருவண்ணாமலையில் முன்னாள் திமுக தலைவர் கலைஞரின் எட்டு அடி உயரம் கொண்ட வெண்கல உருவச் சிலையைத் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். அதன் பிறகு அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக் கூட்டத்தில் பேசுகையில், ''மக்களின் அரசாக, மக்கள் நல அரசாக, மக்கள் விரும்பும் அரசாக, மக்களின் கவலையைப் போக்கும் அரசாக, மக்களுடைய கனவுகளை நிறைவேற்றுகிற அரசாக திமுக அரசு உள்ளது. சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னால் 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' என்ற பயணத்தை திருவண்ணாமலையில்தான் தொடங்கினேன். மறந்திருக்க மாட்டீர்கள். அதன் பிறகு தொகுதி தொகுதியாகச் சென்று தமிழ்நாட்டு மக்களுடைய கோரிக்கைகளை மனுக்களை பெற்றேன். உங்களுடைய கவலைகளை, உங்களை கோரிக்கைகளை, எதிர்பார்ப்புகளை என்னிடம் நீங்கள் ஒப்படைத்து இருக்கிறீர்கள்.
இனி இவை என்னுடைய கவலைகள், என்னுடைய கோரிக்கைகள், என்னுடைய எதிர்பார்ப்புகள். திமுகவின் ஆட்சி அமைந்ததும் 100 நாட்களில் தீர்வு காண்பேன் என்று சொன்னேன், ஸ்டாலினிடம் மனுவைக் கொடுத்தால் அது நிச்சயம் நிறைவேறும் என்ற நம்பிக்கையோடு கோரிக்கை மனுக்களை இலட்சக்கணக்கான மக்கள் கொடுத்தார்கள். திமுக வெற்றி வாகை சூடுவதற்கு இவை அடித்தளம் வகுத்தது. உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற சுற்றுப்பயணம் காரணமாக தமிழக முழுவதும் திமுக வெற்றி பெற்றது'' என்றார்.