
நீங்கள் நினைப்பதுபோல் ஒன்றுமில்லை என திமுக முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி தெரிவித்துள்ளார்.
அமைச்சர் செல்லூர் ராஜூவின் தாயார் ஒச்சம்மாள் வயது 93 கடந்த ஆகஸ்ட் 30ல் காலமானார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், நிர்வாகிகள், பல்வேறு அரசியல் பிரமுகர்கள், தொழிலதிபர்கள் இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் இன்று காலை அமைச்சர் செல்லூர் ராஜூ வீட்டுக்கு மு.க.அழகிரி வருகை தந்து அஞ்சலி செலுத்தினார். இதன் பின்னர் சந்திப்பு முடிந்து வெளியே வந்த மு.க.அழகிரி செய்தியாளர்களை பார்த்து நீங்கள் நினைப்பது போல் ஒன்றும் இல்லை என தெரிவித்துவிட்டு சென்றார்.