Skip to main content

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது!

Published on 21/10/2023 | Edited on 21/10/2023

 

Northeast Monsoon has started in Tamil Nadu

 

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

தமிழகத்தை பொறுத்தவரையில் அதிகளவிலான மழைப்பொழிவை ஏற்படுத்தும் வடகிழக்கு பருவமழை தமிழ்நாட்டில் தொடங்கியது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பாக தென்மேற்கு பருவமழை விலகியுள்ள சூழலில் தமிழ்நாட்டில் நாளை வடகிழக்கு பருவமழை தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், இன்றே வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

நடப்பாண்டு வடகிழக்குப் பருவமழையின் போது தமிழகத்தைப் பொறுத்தரவரையில் இயல்பையொட்டி மழைபெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். வடகிழக்குப் பருவமழை துவக்க நிலையில் சற்று வலு குறைந்து காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடகிழக்குப் பருவமழையின் போது பல்வேறு காற்றழுத்த தாழ்வு நிலை, புயல் சின்னம் உருவாகக் கூடிய சூழல் நிகழும் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

 

சார்ந்த செய்திகள்