Published on 01/10/2018 | Edited on 01/10/2018

புற்றுநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சிகிச்சை முறையை கண்டுபிடித்ததற்காக, அமெரிக்கா மற்றும் ஜப்பானைச் சேர்ந்த நோய் எதிர்ப்பு நிபுணர்களான ஜேம்ஸ் பி.அல்லிஸன், டாஸுக்கு ஹோன்ஜோ ஆகியோர் இந்த ஆண்டுக்கான மருந்தியலுக்கான நோபல் விருதை பெறுகிறார்கள். ஆண்டுதோறும் லட்சக்கணக்கான புற்றுநோயாளிகள் உயிரிழக்கும் நிலையில், புதிய சிகிச்சை முறையை கண்டறிந்ததற்காக இந்த விருதை இருவரும் கூட்டாக பெறுவதாக நோபல் கமிட்டி அறிவித்திருக்கிறது.