ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறை தண்டனை அனுபவித்து வரும் ஏழு பேர் விடுதலையில், தமிழக ஆளுநருக்கே அதிகாரம் உள்ளது என உச்சநீதிமன்றம் கூறியதோடு, இதுகுறித்து ஆளுநர் ஒரு வாரத்தில் முடிவெடுக்க வலியுறுத்தியிருந்த நிலையில், குடியரசுத் தலைவருக்கே அதிகாரம் உள்ளது என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பிரமாணப் பத்திரத்தைத் தாக்கல் செய்துள்ளது.
இது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ஆளுநரின் ஆவணம் கிடைத்த பிறகே இது தொடர்பாக அடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்திருந்தார். இந்நிலையில் பேரறிவாளனை முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரும் மனு, பிப்ரவரி 9-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், நாளைக்கு அந்த வழக்கு விசாரணைக்குப் பட்டியலிடப்படவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.