ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் அணிவகுப்பு நடத்த பல்வேறு தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் தற்போது கீ.வீரமணியும் “உயர்நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது நியாயந்தானா?” என கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்திய சுதந்திர தின 75ம் ஆண்டு, அம்பேத்கரின் பிறந்த நாள் நூற்றாண்டு விழா மற்றும் விஜயதசமியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 50 இடங்களில் ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்த அனுமதி மறுக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “அன்று: பாபர் மசூதியை இடிக்க அம்பேத்கர் நினைவு நாளை தேர்ந்தெடுத்தனர் - இன்று: ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் நடத்திட காந்தியார் பிறந்த நாளைத் தேர்ந்தெடுக்கின்றனர்! உயர்நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது நியாயந்தானா? அமைதிப் பூங்காவான தமிழ்நாட்டை அமளிக்காடாக்க யாரும் துணைபோக வேண்டாம்!” என பதிவிட்டுள்ளார்.