சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரியாக பொன்.மாணிக்கவேல் நியமனம் செய்யப்பட்டதை எதிர்த்தும், சிலைகடத்தல் வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரியும் தமிழகஅரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்க உள்ளதாக தகவல்கள் வந்துள்ள நிலையில், சிலைகடத்தல் வழக்கை சிபிஐக்கு மற்ற கோரிய தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்து தீர்ப்பளித்துள்ளது உச்சநீதிமன்றம்.
ஓய்வு பெற்ற பிறகு சிலை கடத்தல் வழக்குகளில் சிறப்பு அதிகாரியாக பொன்மாணிக்கவேல் நியமித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அப்படி சிறப்பு அதிகாரியாக பணி நியமனம் செய்யப்பட்டதற்கு எதிராகவும்,சிலைகடத்தல் வழக்கை சிபிஐக்கு மற்ற கோரியும் தமிழக அரசு தொடுத்த வழக்கில் உயர்நீதிமன்றம் இந்த உத்தரவு செல்லும் அரசு அவருக்கு ஒத்துழைக்க வேண்டும் என தீர்ப்பளித்தது. உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது.
இன்று இந்த வழக்கிற்கான தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த தீர்ப்பில் சிலைகடத்தல் வழக்கை சிபிஐக்கு மற்ற கோரிய தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்த உச்சநீதிமன்றம் சிலைகடத்தல் வழக்குகளை பொன்மாணிக்கவேல் தொடரலாம் ஆனால் விசாரணையின் போது கைது செய்யும் அதிகாரம் இல்லை என கூறப்பட்டுள்ளது.