Skip to main content

“பள்ளிகள் திறப்பது குறித்து எந்தத் தகவலும் வரவில்லை..” -அமைச்சர் செங்கோட்டையன்!

Published on 12/09/2020 | Edited on 12/09/2020

 

"No information has been received about the schools ..." Minister Senkottayan


ஈரோடு மாவட்டம் கோபி செட்டிபாளையம் சட்டமன்ற தொகுதியில் முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் கதிரவன் தலைமையில் இன்று (12/9/2020)  நடைபெற்றது. இதில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின் போது அவர் கூறியதாவது, "அரசுப் பள்ளியில்  மாணவர்களைச் சேர்க்க பெற்றோர்கள் அதிக ஆர்வமாக உள்ளார்கள், இதுவரை 13 லட்சத்து 84 ஆயிரம் பேர் புதிதாக அரசுப் பள்ளியில் சேர்த்துள்ளனர்.

 

இந்த செப்டம்பர் இறுதி வரை மாணவர் சேர்க்கை நடைபெறும். நம்மை பொறுத்தவரை நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பது தான் நமது அரசின் கொள்கை. ஆனால் இந்த ஆண்டு 238 மையங்களில் 1,17,990 மாணவர்கள் நீட் தேர்வை எழுதவுள்ளனர். வருகிற 5ஆம் தேதி பள்ளிகள் திறப்பது குறித்து எனக்கு எந்தத் தகவலும் வரவில்லை. வந்தால் அந்தத் தகவலை தெரிவிக்கிறேன். நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்து கொண்ட மாணவர்களின் குடும்பங்களுக்கு அரசு உதவி செய்துள்ளது." என்றார்.

 


 

சார்ந்த செய்திகள்