என்.எல்.சி நிறுவனத்தில் பணிபுரியும் அனைத்து இன்கோசர்வ், ஹவுசிங்கோஸ், ஒப்பந்த தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும், விடுபட்ட அனைவரையும் இன்கோசர்வில் இணைக்க வேண்டும், சமவேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும், பதவி உயர்வு வழங்க வேண்டும், விடுபட்ட அனைத்து அலவென்ஸ் களையும் வழங்க வேண்டும், சுரங்கப்பகுதி தொழிலாளர்களுக்கு உயர் மருத்துவ சிகிச்சை வழங்க வேண்டும், தொழிலாளர் அனைவரையும் ஏஎம்சி-யில் இணைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி என்.எல்.சியில் பணியாற்றும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இன்கோசெர்வ், ஒப்பந்த தொழிலாளர்கள் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் கோரிக்கைகளை வலியுறுத்தி என்.எல்.சி நுழைவாயில் (ஆர்ச் கேட்) அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தொ.மு.ச, சி.ஐ.டி.யு, பாட்டாளி தொழிற்சங்கம், தொழிலாளர் வாழ்வுரிமை சங்கம், அண்ணா தொமுச, எல்.எல்.எப் உள்ளிட்ட தொழிற் சங்கத்தின் நிர்வாகிகளும், அனைத்து பகுதியின் தொழிலாளர்களும் கலந்து கொண்டனர்.