Skip to main content

 என்.எல்.சி சுரங்கத்திற்கு நிலங்கள் எடுப்பதற்கு எதிராக போராட்டம் நடத்திய  கிராம மக்கள் கைது! 

Published on 10/01/2019 | Edited on 10/01/2019
m

 

என்.எல்.சி  மூன்றாவது சுரங்கம் அமைப்பதற்காக கடலூர் மாவட்டம் விருத்தாசலம் மற்றும் புவனகிரி வட்டாரங்களில் 40 கிராமங்களில் உள்ள 12,125 ஏக்கர் பரப்பளவில் விளைநிலங்களை கையகப்படுத்த மாவட்ட நிர்வாகம் முயற்சித்து வருகிறது.    அதற்கு  எதிர்ப்பு தெரிவித்து அரசியல் கட்சிகள், கிராம மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

m

 

இந்நிலையில்  மக்கள் அதிகாரம் அமைப்பு சார்பில் விருத்தாசலம் அடுத்த கம்மாபுரத்தில்  ஆர்ப்பாட்டம் நடத்த இருந்தனர். ஆனால் திடீரென  ஆர்ப்பாட்டம் நடத்த காவல்துறையினர் தடை விதித்தனர். அதேசமயம்   தடையை மீறி மக்கள் அதிகாரம் அமைப்பினர் மற்றும் கிராம மக்கள் என்.எல்.சி நிறுவனத்தை கண்டித்து முழக்கங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.  

 

m

 

அந்த ஆர்ப்பாட்டத்தின் போது  என்.எல்.சி நிறுவனம் முதல் இரண்டு சுரங்கத்திற்காக, கையகப்படுத்தப்பட்ட விளை நிலங்களுக்கே உரிய இழப்பீடு வழங்காத போது, மூன்றாவது சுரங்கம் அமைப்பதற்கு  மாவட்ட நிர்வாகத்தின் முலம் நிலம் கையப்படுத்த முயற்சிப்பதை கண்டித்தும்,  மக்களின் வாழ்வாதரத்தை அழிக்க துடிக்கும் மத்திய அரசை கண்டித்தும்  முழக்கங்கள் எழுப்பினர். அதையடுத்து காவல் துறையினரின்  தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்ததாக மக்கள் அதிகாரம் அமைப்பினர், விவசாயிகள் பெண்கள் என 100-க்கும் மேற்பட்ட அனைவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.


 

சார்ந்த செய்திகள்