நித்தியானந்தாவின் முன்னாள் சீடர்களான லெனின் கருப்பன், ஆர்த்திராவ் ஆகியோர் நித்தி மீது தொடுத்திருந்த பாலியல் அத்துமீறல் வழக்கில், ராம்நகர் நீதிமன்றம் அவருக்குக் கொடுத்திருந்த முன்ஜாமீனை கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி குன்ஹா அண்மையில் ரத்து செய்தார். அதோடு நித்தி விவகாரத்தில் அவருக்கு சாதகமாக நடந்துகொண்ட அந்த நீதிமன்றத்தையும் அவர் கடுமையாகக் கண்டித்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதைத் தொடர்ந்து தற்போது, ஜாமீனில் வரமுடியாத பிடிவாரண்டை பிறப்பித்து நித்தி தரப்புக்கு ஹைவோல்ட் அதிர்ச்சி கொடுத்திருக்கிறது ராம்நகர் கோர்ட். அதனால் வீடியோவில் கூட தலை காட்ட முடியாமல் நித்தியானந்தா பதட்டத்தில் இருப்பதாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில், சமீபத்தில் வெளியான வீடியோ ஒன்றில் தோன்றிய நித்தியானந்தா, 'கைலாசத்தை கட்டி அமைக்கும் பணிகள் முடிவடைந்துவிட்டது. இனிமேல் எனக்கும் தமிழகத்திற்கும் எந்த வித தொடர்பும் இல்லை, என் வாழ்நாள் முழுவதும் நான் தமிழில் பேசுவேனே தவிர வேறு எந்த சம்பந்தமும் இல்லை' என தெரிவித்துள்ளார்.