பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் அருப்புக்கோட்டை தேவங்கூர் கல்லூரி நிர்வாகிகளிடம் 6 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. விருதுநகர் சிபிசிஐடி அலுவலத்தில் இந்த விசாரணை நடைபெற்றது.
தலைவர் ஜெயசூரியன் மற்றும் துணைத்தலைவர் சங்கரலிங்கத்திடம் இந்த விசாரணை நடைபெற்றது. மேலும், கல்லூரி செயலாளர் ராமசாமி்யிடமும் சிபிசிஐடியின் விசாரணை நிறைவுபெற்றது.
கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் வலை விரித்த பேராசிரியை நிர்மலா தேவி பேசிய ஆடியோ வெளியானதை அடுத்து அவர் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். நிர்மலா தேவி மீதான வழக்கை அருப்புக்கோட்டை போலீஸார் விசாரித்து வந்த நிலையில், வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து நிர்மலா தேவியை 12 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீஸ் மனு செய்துள்ளது. இந்நிலையில், நிர்மலா தேவி விவகாரம் தொடர்பாக கல்லூரி நிர்வாகிகளிடம் 6 மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளது சிபிசிஐடி.